டெல்லி : விண்வெளியில் மிஷன் சக்தி என்ற தாக்குதலை இந்தியா இன்று அரங்கேற்றியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு முக்கிய தகவலை இன்று தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர், பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- விண்வெளியில் மிஷன் சக்தி என்ற ஆபரேஷன் மூலம் 3 நிமிடங்களில், செயற்கைக்கோளை இன்று இந்தியா தாக்கி அழித்துள்ளது. இன்று இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. 300 கி.மீ தொலைவில் தாழ் நீள்வட்டப்பாதையில் வந்த செயற்கைக்கோள் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியது. நமது நாட்டின் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. விண்வெளி சாதனை நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு இன்று இடம் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பிறகு செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை இந்தியா சிறப்பாக கையாண்டுள்ளது. இதன்மூலம், இந்தியா விண்வெளித்துறையில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விண்வெளித்துறையில் ஆயுதம் கூடாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.
ஆனால், விண்வெளியில் எதிரிகளை எதிர்கொள்ளும் ஆயுதம் இந்தியாவிடம் தற்போது உள்ளது. நாட்டு மக்களுக்கும், மிஷன் சக்தியில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள், என்றார்.