கோவை : கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வீட்டின் அருகே வசித்து வரும் நால்வர் மீது சந்தேகம் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களின் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல, பள்ளிக்குச் சென்ற சிறுமி, பள்ளி முடிந்து நேற்று சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். மேலும், விடிய விடிய பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை கஸ்தூரிநாயக்கன் புதூர் பகுதியில் கத்தியால் அறுபட்ட காயங்களோடு, சிறுமி பள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, குற்றவாளிகளை பிடிக்க தாமதிப்பதைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்கக் கோரியும் கோவை அரசு மருத்துவமனை முன்பு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனையடுத்து, 10 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக துடியலூர் சாலையில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த குழந்தையின் பெற்றோர், தங்களது வீட்டின் அருகில் வசித்து வரும் விஜயகுமார், துரைராஜ், சந்தோஷ்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகிய நால்வர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் பெற்றோர்கள், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த குழந்தையின் பெற்றோருடன் உடன் வந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கூறுகையில், “உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்,” என கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.