சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் : குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கோவை : பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.


கோவை : பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கூறியதாவது :- பெற்றோர் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த சிறுமியின் பெற்றோர் ஊராட்சி பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அவர்கள், அரசிடம் உரிய நிவாரணம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பும், மக்களின் முன்பும் நிறுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். போராட்டத்திற்கு முன்பு எந்த அளவிற்கு விரைவு நடவடிக்கை எடுக்க முடியுமோ, அந்த அளவிற்கு நடவடிக்கை எடுப்போம், என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...