சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி துடியலூரில் பொதுமக்கள் சாலை மறியல்

கோவை : பன்னிமடை அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை தர வலியுறுத்தியும் துடியலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை : பன்னிமடை அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை தர வலியுறுத்தியும் துடியலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த சிறுமி தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். பின்னர், விடிய விடிய குழந்தையை அனைவரும் தேடிய நிலையில், நேற்று அதிகாலை சிறுமி பிணமாக அதே பகுதியில் கிடந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், சிறுமியின் பெற்றோர் குற்றவாளியை விரைவாக கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர். 



இந்த நிலையில், தற்போது துடியலூர் முக்கிய சாலையில் பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் இருபுறமும் சாலையை மறித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...