கோவை : பன்னிமடை அருகே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்குடன் சேர்த்து போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களின் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல, பள்ளிக்குச் சென்ற சிறுமி, பள்ளி முடிந்து நேற்று சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். மேலும், விடிய விடிய பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை கஸ்தூரிநாயக்கன் புதூர் பகுதியில் கத்தியால் அறுபட்ட காயங்களோடு, சிறுமி பள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, குற்றவாளிகளை பிடிக்க தாமதிப்பதைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்கக் கோரியும் கோவை அரசு மருத்துவமனை முன்பு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, சிறுமி கொலை வழக்கில் வசந்த், விஜயக்குமார் என்ற இருவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், போலீஸ் விசாரணையில் குழந்தையின் வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதருக்குள் 5 பேரும் கஞ்சா அடித்து பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், காவல்துறை தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால், காவல்துறை தரப்பில் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்குடன் சேர்த்து போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.