ராகுலின் ரூ.72,000 திட்ட அறிவிப்பு மக்களை முட்டாள்கள் ஆக்குவதற்காக மட்டுமே : கோவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சனம்

கோவை : இந்தியாவின் வறுமை நிலைக்கு காங்கிரசே காரணம் என்றும், ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 72,000 ராகுல் அறிவித்திருப்பது மக்களை முட்டாளாக்குவதற்காக மட்டுமே என கோவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.


கோவை : இந்தியாவின் வறுமை நிலைக்கு காங்கிரசே காரணம் என்றும், ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 72,000 ராகுல் அறிவித்திருப்பது மக்களை முட்டாளாக்குவதற்காக மட்டுமே என கோவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.



கோவையில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது, கட்சி தொண்டர்களிடையே அவர் பேசியதாவது :- மத்திய, மாநில அரசுகள் ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பாடுபட்டு வருகிறது. ஏழை மக்களின் பிரச்சனைகள் குறித்து பா.ஜ.க.அரசுக்கு நன்கு தெரியும். ஏனெனில், பிரதமர் மோடி ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர், டீ கடையில் வேலை செய்து இந்த இடத்திற்கு வந்து இருப்பதால், ஏழைகளின் கஷ்டங்களை நன்கு அறிவார். பெண்கள் பாதுகாப்பிற்காக, வீடுதோறும் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், குடும்ப பெண்களுக்கு உதவிடும் வகையில், சிலிண்டர் மானியம் அளிக்கப்படுகிறது. அதோடு, கிராமங்களில் மண்ணெண்ணை விளக்கில் மாணவர்கள் படித்து சிரமப்படுவதை தவிர்க்க, கிராமங்களில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நமது நாட்டை பார்த்து அண்டை நாடுகள் பயப்படுவதற்கு பிரதமர் கோடியே காரணம்.

அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே மாபெரும் கூட்டணி அமைய அமைச்சர் எஸ்.பி. வேலுமணிதான் காரணம். அம்மாவின் இறப்பிற்கு பிறகு அ.தி.மு.க.அழிந்து விடும் என எதிர்கட்சிகள் கூறி வந்தனர். ஆனால், தற்போது, மெகா கூட்டணி அமைந்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்திற்கு பிரதமர் மோடி அதிகளவு நிதியை ஒதுக்கி வருகிறார். வரும் காலத்தில், சர்வதேச தரம் வாய்ந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.

தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இணைக்கப்படும், எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ”நாட்டில் வறுமையை உருவாக்கியதே காங்கிரஸ் கட்சி தான். தற்போது, ஏழ்மையிலும் ஏழ்மை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 நிதி வழங்கப்படும் என் அறிவித்து, மக்களை முட்டாள்களாக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார்,”. என்றார்.

இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. மாநில பொது செயலாளர் வானதி ஶ்ரீனிவாசன், அ.தி.மு.க. அம்மன் அர்ஜுன், இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...