2ஜி வழக்கில் ஆ. ராசா மீண்டும் சிறை செல்வது உறுதி : நீலகிரியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேச்சு

நீலகிரி : 2ஜி வழக்கில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா மீண்டும் சிறை செல்வது உறுதி என நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

நீலகிரி : 2ஜி வழக்கில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா மீண்டும் சிறை செல்வது உறுதி என நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.பி. தியாகராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். நீலகிரி தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க மேட்டுப்பாளையம் வந்த அ.தி.மு.க. வேட்பாளர் எம்.தியாகராஜனுக்கு, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட 3,000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



இதன் பின்னர், கூட்டணி கட்சியினருக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது :- இந்தத் தேர்தலில் நாடே உன்னிப்பாக கவனிக்கும் தொகுதியாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உள்ளது. இங்கு அ.தி.மு.க., சார்பில் தொகுதிக்குட்பட்ட வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், தி.மு.க.,விற்கு போட்டியிட இங்கு ஆள் கிடைக்காமல், பெரம்பலூரில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆ.ராசா நிறுத்தப்பட்டுள்ளார்.



இவர் 2ஜி முறைகேடு மூலம் தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் உலகளவில் அவமானத்தை தேடி தந்தவர். இவ்வழக்கின் மேல்முறையீட்டில் இவர் மீண்டும் சிறை செல்வார். கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு வெற்றி பெற்று விடலாம் என அவர் நினைப்பது நடக்காது. கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு, இத்தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் அ.தி.மு.க. வேட்பாளர் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு நிறைவேற்றப்படும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகள் சேர்க்கப்படும், என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...