கோவை : சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவீட்டாளர், ஆயிரம் ரூபாய் முன்பணம் வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.
கோவை : சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவீட்டாளர், ஆயிரம் ரூபாய் முன்பணம் வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.
சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி. இவருக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது. மேலும், இவர் தனது நிலத்தை சப்-டிவிஷன் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அதேபோல, கடந்த 3 மாதமாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவைப் பிரிவிற்கும் அலைந்துள்ளார். அப்போது, அங்கிருந்த நில அளவீட்டாளர் வெங்கடாசலம் (50) என்பவரை அணுகி, பாலதண்டாயுதம் தனது இடத்தை சப்டிவிசன் செய்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு, அவர் ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, 3 மாதங்களாக அலைந்த பாலதண்டபாணி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில், ஆயிரம் ரூபாய் அட்வாட்ஸ் கொடுத்துவிட்டு மீதி ரூ. 24,000-தை பிறகு தருவதாக கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, நேற்று சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பாலதண்டபாணி, பணத்தை நில அளவீட்டாளர் வெங்கடாசலத்திடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையிலான போலீசார் வெங்கடாசலத்தை கையம் களவுமாக பிடித்தனர். பின்னர், அவரது அலுவலகத்தில் சோதனை நடத்திய பிறகு, அவரைக் கைது செய்தனர்.
மேலும், சூலூரில் இந்த ஆண்டில் மட்டும் நில அளவீட்டாளர்கள் இதுவரை இரண்டு பேர் லஞ்சம் வாங்கி பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்போது பிடிபட்ட நில அளவீட்டாளர் பணிக்கு சேர்ந்து ஆறு நாட்கள் மட்டுமே ஆன நிலையில், தைரியமாக லஞ்சம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.