திருப்பூர் : திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளை சந்தைப்படுத்த ஜவுளிப்பூங்கா ஏற்படுத்தி தரப்படும் என நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். செல்வம் உறுதியளித்துள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.எஸ். பழனிசாமியிடம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளை சந்தைப்படுத்த ஜவுளிப்பூங்கா ஏற்படுத்தப்படும். நெசவாளர்களுக்கான குடியிருப்பு, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான பணிகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவேன் என உறுதியளித்து பிரச்சாரத்தை மேற்கொள்வேன்," எனக் கூறினார்.