கோவை : கோவையில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 1.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
அந்த வகையில் கடந்த 11-ம் தேதி முதல் இன்று (மார்ச் 26) வரை நடத்தப்பட்ட சோதனையின் போது, எவ்வித ஆவணங்களுமின்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 79 லட்சத்து 40 ஆயிரத்து 65 ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 64 பட்டுச் சேலைகளும், 1,158 மதுபாட்டில்களும், ஏர்பிஸ்டல் ஒன்றும் சம்பந்தப்பட்ட எல்லை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிங்காநல்லூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட அந்நிய செலாவணி அமெரிக்கா டாலர் 35,000, ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால், உரியவர்களிடம் இன்று திருப்பி ஒப்படைக்கப்பட்டது.