கோவை : கோவையில் தேர்தல் கூட்டம் முடிந்து வீடு திரும்பிய இந்து அமைப்பு பிரமுகரின் வாகனத்தை ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரத் சேனாவின் மாநிலச் செயலாளர் வாசு (39). இவர் ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பன் நகரில் வசித்து வருகிறார்.நேற்று இரவு கண்ணப்பன் நகர் பொதுக் கூட்டத்தை முடித்து விட்டு, சுமார் 1 மணியளவில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும், அவர் தனது பொலிரோ வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 அளவில் பொலிரோ வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ எரியும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர், வாசுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர்.
பின்னர் தகவலறிந்து வந்த ரத்தினபுரி போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர் ஜீப்பின் மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. இந்தக் காட்சிகள் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இந்த ஹெல்மெட் அணிந்து வந்த நபர் யார்.. ?, எதற்காக தீ பற்ற வைத்தார்..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் கூட்டம் முடித்துவிட்டு வீடு திரும்பிய இந்து அமைப்பு நிர்வாகியின் வாகனத்தை மர்ம நபர் எரித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது