பள்ளிக்குச் சென்ற சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்பு

கோவை : துடியலூரை அடுத்த பன்னிமடையை சேர்ந்த சிறுமி, பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில், இன்று அதிகாலை கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : துடியலூரை அடுத்த பன்னிமடையை சேர்ந்த சிறுமி, பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில், இன்று அதிகாலை கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களுக்கு ஏழு வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தக் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தது. இந்த நிலையில், சிறுமி நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வழக்கம்போல சென்று கொண்டிருந்தார். ஆனால், சிறுமி நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சந்தேகம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும், உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என அனைவரும் பல்வேறு பகுதியில் விடிய விடிய தேடினர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் கஸ்தூரிநாயக்கன் புதூர் என்கிற இடத்தில் கத்தியால் அறுபட்ட காயங்களோடு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிறுமி பள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து, போலீசார் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர். மேலும், இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பள்ளிக்குச் சென்ற சிறுமி பிணமாக சாலையோரத்தில் கிடந்த சம்பவம் கோவை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...