நீலகிரி : கூடலூர் அருகே உள்ள அம்பலமூலா கிராம மக்களை புலி அச்சுறுத்தி வரும் நிலையில், வனத்துறையினர் பொருத்தியிருந்த கூண்டில் 13 வயது மதிப்புள்ள ஆண் புலி சிக்கியது.

கூடலூர் அருகேயுள்ள அம்பலமூலா கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக புலி நடமாட்டத்தை பொதுமக்கள் நேரில் பார்த்ததையடுத்து, வனத்துறை 8 இடங்களில் தானியங்கி கேமிராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும், பொதுமக்கள் மாலை தேரங்களில் தனியாக வருவதை தவிர்க்கவும், தேயிலை தோட்டங்களுக்கு தனிமையில் செல்வதை தவிர்க்க வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதனிடையே, கூடலூரை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வனத்துறை பணியாளர்களை புலி தாக்கியது. இப்பகுதி இரு மாநில எல்லையாக இருப்பதால், இந்த புலிதான் கூடலூர் அம்பலமூலா கிராமத்தில் சுற்றிவருகிறதா..? என்ற கண்ணோட்டத்தில் வனத் துறையினர் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், வயநாடு இருளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் 13 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சிக்கியது. இதன் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாலும், பல்லும் விழுந்துள்ளதால் வனப்பகுதியில் விடுவது குறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்குப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.