நீலகிரி : கோத்தகிரியில் உள்ள படுகர் இனத்தவரின் குலதெய்வ ஹெத்தையம்மன் கோயிலில் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜன் காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினார்.

கோத்தகிரி அருகே பேரகணியில் உள்ள படுகர் இனத்தவரின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயிலில் காணிக்கை செலுத்தி வழிபாடு செய்த அ.திமு.க மக்களவை வேட்பாளர் தியாகராஜனுக்கு வழி முழுவதும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோத்தகிரியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு, அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை அறிமுகம் செய்து வைத்தார்.
இக்கூட்டத்தில் பல்வேறு கட்சியிலிருந்து அ.தி.மு.க.வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர். முன்னாள் பிஷப் வில்லியம் மோசஸ் கலந்துகொண்டு தனது ஆதரவை அளித்தார். இதில், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.அர்ஜுனன், ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.