நீலகிரி : நீலகிரி மக்களவைத் தேர்தல் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா இன்று வேட்பு மனு தாக்கல் செய்த போது, கடந்த 5 ஆண்டுகளில் சொத்து பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களே இந்த தேர்தலிலும் தாக்கல் செய்துள்ளார்.

அதாவது, ஆ.ராசாவின் பேரில் அசையும் சொத்துக்கள் 1 கோடியே 45 லட்சத்து 90 ஆயிரத்து 709 ரூபாயும், அசையா சொத்துக்கள் மதிப்பு 14 லட்சத்து 87 ஆயிரத்து 419 ரூபாயும் உள்ளது. மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையும் சொத்துக்கள் 93 லட்சத்து 93 ஆயிரத்து 597 ரூபாயும், அசையா சொத்துக்கள் 14 லட்சத்து 12 ஆயிரத்து 975 ரூபாயும் இருக்கிறது. அதேபோல, மகள் மயூரி பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ. 18 லட்சத்து 15 ஆயிரத்து 400 ரூபாயும், பரம்பரை சொத்துக்களில் அசையும் சொத்து மதிப்பு 41 லட்சத்து 3 ஆயிரத்து 540 ரூபாயும், அசையா சொத்துக்கள் 14 லட்சத்து 53 ஆயிரத்து 875 ரூபாயும் என மொத்தம் 3 கோடியே 75 லட்சத்து 42 ஆயிரத்து 880 ரூபாயும் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
இதில், ஆ. ராசாவுக்கு சொந்தமாக 108 சவரன் தங்கமும், மனைவி பரமேஸ்வரிக்கு சொந்தமாக 175 சவரன் தங்க நகைகளும் மற்றும் மகள் மயூரிக்கு 25 சவரன் தங்க நகைகளும் உள்ளன. ராசாவுக்கு சொந்தமாக 4.182 கிலோ வெள்ளியும், மனைவிக்கு சொந்தமாக 10 கிலோ வெள்ளியும், மகளுக்கு சொந்தமாக ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர கம்மல் மற்றும் நெக்லஸ் உள்ளன.
ஆ. ராசாவின் பெயரில் திருச்சியில் ரூ. 32 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான வீடும், மனைவி பரமேஸ்வரி பெயரில் ரூ.14 லட்சம் மதிப்பிலான 10.53 ஏக்கர் நிலம் திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ளது. பெரம்பலூரில் ரூ. 8 லட்சத்து 3 ஆயிரத்து 875 ரூபாய் மதிப்பிலான பரம்பரை சொத்தாக 1.62 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும், ரூ. 13 லட்சம் மதிப்பிலான நான்கு சக்கர வாகனமும் உள்ளது.
ஆ.ராசா மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், வருமான வரித்துறையில் மதிப்பீடு செய்யப்படாமல் ரூ. 25 லட்சத்து 52 ஆயிரத்து 260 தொகை நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.