கோவை : அந்தமான் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நிதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது.
கோவை : அந்தமான் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நிதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரபரப்புக்கு இடையில் இன்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அந்தமான் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், அந்தமானில், இரு கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
"மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனான இந்த சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாக அமைந்தது. எங்கள் இரு கட்சிகளின் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன். வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய ஏப்ரல் 6-ஆம் தேதி அந்தமான் செல்கிறேன்," என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.