வெள்ளலூர் குப்பை கிடங்கு தீவிபத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி

கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர், கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர், கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கடந்த சனிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தின் துரித நடவடிக்கையின் பேரில் தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களால் தீ அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 



வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 28 தீயணைப்பு வாகனங்களில் தலா இரண்டு தண்ணீர் வாகனங்களுடன் தீயணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வெப்ப அழுத்தத்தால் புகை மூட்டம் அதிகமானதால், குப்பைக்கிடங்கின் பாதிப்பினை சூலூர் விமானப்படையினைச் சேர்ந்த ஹெலிகாப்டர் பத்து முறை சுற்றி ஒரு சுற்றிற்கு 3,500 லிட்டர் வீதம் தண்ணீர் ஊற்றப்பட்டு, மேலும் தீ பரவாமல் தடுக்கும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

மீத்தேன் வாயு குப்பைக்கிடங்கிலிருந்து வெளியாகி இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படக் காரணமாக உள்ளது எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க குப்பைக்கிடங்கினை பலபகுதிகளாக குறுக்கு வெட்டாக வழிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், தண்ணீர் மற்றும் மணல் நிரப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 6 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 5 ஜே.சி.பி. இயந்திரங்கள், 58 தண்ணீர் லாரிகள், 25 கழிவுநீர் சுத்திகரிப்பு லாரிகள், 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 600 பணியாளர்கள் கொண்டு, மேலும் புகைமூட்டம் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கை, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத், தீயணைப்புத் துறை டி.ஜி.பி. காந்திராஜன், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்ன ராமசாமி, தீயணைப்புத்துறை இணை இயக்குநர் விஜயசேகர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...