வாய்க்காலில் விழுந்த 4 மாத குட்டி யானையை மீட்டு அதன் குடும்பத்திடம் சேர்த்த வனத்துறையினருக்கு குவியும் பாராட்டு

ஈரோடு : அந்தியூர் வனப்பகுதி அருகே வாய்க்காலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த 4 மாத குட்டி யானையை மீட்டு, அதன் குடும்பத்திடம் சேர்த்த வனத்துறையினர் மற்றும் பழங்குடியினத்தவர்களின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


ஈரோடு : அந்தியூர் வனப்பகுதி அருகே வாய்க்காலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த 4 மாத குட்டி யானையை மீட்டு, அதன் குடும்பத்திடம் சேர்த்த வனத்துறையினர் மற்றும் பழங்குடியினத்தவர்களின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் வறட்டுப்பள்ளம் அணையின் முக்கிய வாய்க்கால் அருகே 4 மாத குட்டி யானையுடன் 2 யானைகள் வந்து கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராதவிதமாக குட்டி யானை வாய்க்காலின் உள்ளே விழுந்தது. இதைத் தொடர்ந்து, யானையின் பிளிறல் சத்தத்தைக் கேட்டு வந்த வனக் கண்காணிப்பாளர் தர்மலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் பழங்குடியினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். 

பின்னர், குட்டி யானை மீட்க வனத்துறையினரும், பழங்குடியின மக்களும் வாய்க்காலில் இறங்கினர். ஆனால், அவர்களைக் கண்டு மிரண்ட குட்டி யானை அங்கும், இங்குமாய் ஓடிக் கொண்டே இருந்தது. அதோடு, குட்டியின் பிளிறல் சத்தத்தைக் கேட்டு, வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் மீண்டும் வாய்க்கால் அருகே வந்தது. இருப்பினும், சிறிது போராட்டத்திற்குப் பிறகு, குட்டி யானை வாய்க்காலில் இருந்து வெளியேற்றப்பட்டது. பின்னர், அது அங்கிருந்தவர்களை துரத்தியது. 



வாய்க்காலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த 4 மாத குட்டி யானையை மீட்டு, மீண்டும் அதன் குடும்பத்திடம் சேர்த்த வனத்துறையினர் மற்றும் பழங்குடியின மக்களின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...