கோவை : மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 18 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த நிலையில், இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 3 பிரிவுகளாகப் பிரிந்து நகரின் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் மோத்தேப்பாளையம் என்ற இடத்தில் செந்தில் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சிறுமுகையில் இருந்து வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 18.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போது, வாகனத்தில் வந்தவர்கள் சிறுமுகையை சேர்ந்த காந்தி மற்றும் ஜனார்த்தன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் இப்பணத்தை வங்கியில் செலுத்தக் கொண்டு சென்றதாக தெரிவித்தனர். இதற்கான ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லாத காரணத்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பத்து லட்சத்திற்கும் அதிகமான தொகை என்பதால், நேரடியாக கருவூலகத்திற்கு செலுத்தப்படாமல், இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், பணத்திற்கான உரிய ஆவணங்களைக் காட்டி, அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.