சிறு, குறு தொழில்களை காக்க ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டியை முழுமையாக ரத்து செய்வோம் : வேட்பு மனு தாக்கல் செய்த பி.ஆர். நடராஜன் உறுதி

கோவை : சிறு, குறு தொழில்களை காப்பாற்றும் வகையில், ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டி.யை முழுமையாக ரத்து செய்யப்படும் என கோவை தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் உறுதியளித்துள்ளார்.


கோவை : சிறு, குறு தொழில்களை காப்பாற்றும் வகையில், ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டி.யை முழுமையாக ரத்து செய்யப்படும் என கோவை தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் உறுதியளித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளருமான ராசாமணியிடம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், பி.ஆர். நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- கோவை மாவட்டத்தின் அமைதி வேட்பாளராக தான் போட்டியிடுகிறேன். உலக அளவில் பம்ப் உற்பத்திக்கு பெயர் பெற்ற கோவை தொழில் தற்போது நசுங்கி உள்ளது. 50 ஆயிரம் தொழிற்சாலைகளும், 5 லட்சம் தொழிலாளர்களும் தமிழகத்தில் வேலை இழந்திருக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிறு, குறு தொழில்களை காக்க ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டியை முழுமையாக ரத்து செய்வோம். 

குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரை வார்ப்பதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். மக்களுக்கு குறைந்த விலையில் தரமான குடிநீரை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்கள் விவசாயிகளிடம் எடுக்கப்படுவது தடுக்கப்படும். இயற்கை வழங்கிய கொடையான மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட வேண்டும். விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தனி நபர் சார்ந்த பிரச்சனை அல்ல, என்றார். 

மேலும், விதிமுறைகள் மீறி பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, "பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு செல்வோம். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் உயிரிழந்த இளம்பெண்களின் மரணங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், என பி.ஆர். நடராஜன் தெரிவித்தார். 

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...