கோவை : நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எஸ்.கல்யாண சுந்தரம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எஸ்.கல்யாண சுந்தரம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை அடுத்தடுத்து தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எஸ்.கல்யாண சுந்தரம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இவர் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ள கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றார். எஸ்.கல்யாண சுந்தரம் கடந்த 2016-ல் நடந்த தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.