கோவையில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற முதல்நிலை தணிக்கை ஆய்வாளர் வேட்புமனு

கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற முதல்நிலை தணிக்கை ஆய்வாளர் கோவிந்தன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.


கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற முதல்நிலை தணிக்கை ஆய்வாளர் கோவிந்தன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்., 18-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி முதல் தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. பலவேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தொடர்ந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற முதல்நிலை தணிக்கை ஆய்வாளர் கோவிந்தன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கோவில்பாளையம் அருகே உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ராதாமணி. இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. 

“இந்த தேர்தலில் முதல் முறையாக பி.எஸ்.பி சார்பில் யானை சின்னத்தில் போட்டியிட உள்ளேன். பாபா சாஹிப் அம்பேத்கர் தான் மக்களுக்கு ஓட்டு உரிமையை பெற்று தந்தவர். அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தலில் போட்டியிடுகின்றேன்,” என பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கோவிந்தன் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...