கோவை : பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கண்ணில் கருப்பு துணி கட்டிகொ கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்., 18-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி முதல் தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. பலவேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களும், சுயேட்சைகளும் அவரவர் பாணியில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் சுந்தர்ராஜன் என்பவர் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கருப்பு துணி கட்டிக் கொண்டு வந்து வேட்புமனு தாக்கலல் செய்வது குறித்து அவரிடம் கேட்டபோது, “ ஜனநாயகம் செத்து விட்டது. பணநாயகம் தான் உள்ளது. இதனால் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன்,” என்றார்.