கோவை : கோவையில் தனியார் பள்ளியில் மக்கள் நீதி மய்யத்தினர் மருத்துவர்களை சந்தித்து பேசிய விவகாரம் தொடர்பாக சம்பந்தபட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக, பெர்க்ஸ் பள்ளியில் மருத்துவர்களுடனான ஒரு மணி நேரம் கூடிய சந்திப்பை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டு வந்தார். அப்போது, முறையான அனுமதி இன்றி இந்த சந்திப்பு நடந்து கொண்டிருப்பதாகக் கூறி, தேர்தல் பறக்கும் படையினர், அதனை தடுத்து நிறுத்தினர். இதனால், மருத்துவர்கள் மற்றும் பிற தரப்பினர் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு, அரசியல் அல்லாத சந்திப்பு தான் நடந்து கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மருத்துவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய விவகாரம் தொடர்பாக, தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சிங்காநல்லூர் தொகுதி தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, இன்று தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.