காந்திபுரம் அருகே சி.பி.ஐ(எம்) தேர்தல் அலுவலகம் திறப்பு

கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக காந்திபுரம் அருகே சி.பி.ஐ(எம்) தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக காந்திபுரம் அருகே சி.பி.ஐ(எம்) தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.



தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் சி.பி.ஐ(எம்) இடம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் சி.பி.ஐ(எம்)-ன் பி.ஆர்.நடராஜன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் சி.பி.ஐ.(எம்) தேர்தல் அலுவலகத்தை தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு தலைவரும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பொங்கலூர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதனை தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதசார்பற்ற கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...