கோவை : அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதையொட்டி,கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 18ம் தேதி ஒரே நாளில் நடைபெறுகிறது. அதோடு, காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்ந்து தேர்தல் நடைபெறுகிறது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளராக சி.பி.ஐ.(எம்) பி.ஆர் நடராஜன் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க., வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த இரு கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகளும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதனையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆட்சியர் அலுவலகம் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் முன்பே நிறுத்தப்படுகிறது.