தூத்துக்குடி துப்பாக்கிசூடு உள்ளிட்ட பொதுமக்கள் மீதான அட்டூழியங்களே மய்யம் தொடங்கக் காரணம் : கோவை பொதுக் கூட்டத்தில் கமல் விளக்கம்

கோவை : தூத்துக்குடி துப்பாக்கிசூடு, அனிதா தற்கொலை, கவுரி லங்கேஷ் கொலை உள்ளிட்ட சில சம்பங்களே, நான் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதற்கான காரணம் என கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை : தூத்துக்குடி துப்பாக்கிசூடு, அனிதா தற்கொலை, கவுரி லங்கேஷ் கொலை உள்ளிட்ட சில சம்பங்களே, நான் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதற்கான காரணம் என கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. இதில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு, கடந்த 2016, 2017 மற்றும் 18-ம் ஆண்டுகளில் தேதி குறிப்பிட்டு சில சம்பங்களை கூறி, நான் இந்த கட்சியை தொடங்கியதற்கான காரணமும், அந்த கொடி அங்கே பறப்பதற்கு காரணம் என்றார்.

அவர் பேசியதாவது :- பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் கலந்துவிட்டதாகக் கூறி மாணவனையும், மீனவனையும் காவல்துறை அடித்து அந்த போராட்டத்துக்கு கருப்பு சாயம் பூசியது, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து கடைசியில் கோவணத்துடன் ஊர் திரும்பியது, நீட் தேர்வால்அரியலூர் அனிதா தற்கொலை, எழுத்தாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை,



கோவை - அவினாசி சாலையில் ரகுநாத் என்பவர் மீது பேனர் விழுந்து பலியான சம்பவம், தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் பலியான சம்பங்கள் தான் என்னை கட்சி தொடங்க காரணமாக இருந்தது. அதேபோல, 2009-ல் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம்.

எதிர்கட்சியைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் என்னை பார்த்து, நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கேட்கிறார்கள். ஆம் நான் நடிகன் தான். நான் நல்ல நடிகன். நான் வரி கட்டும் நடிகன். நான் நேர்மையான நடிகன். நீங்கள் எல்லாம் நடிகரிடம் தோல்வி அடைந்ததால் பயப்படுகிறீர்கள். ஒரு நடிகர்தான் உங்களை ஆட்சிக்கு வர விடாமல் வனவாசம் அனுப்பியது. அதனால்தான் நீங்கள் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள். மேலும், அரசிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். பொள்ளாச்சி சம்பவத்தை எப்படி இவ்வளவு அலட்சியமாக பார்க்க முடிகிறது..?



பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியில் கூறிய கோவை எஸ்.பி. மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்..? தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு யார் அனுமதி கொடுத்தது..?, முகிலன் எங்கே..?, இந்த கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும், எனக் கூறினார்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...