கோவையில் மக்கள் நீதி மய்யத் துணைத் தலைவர் மகேந்திரன் போட்டி

கோவை: மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத் துணைத் தலைவர் மகேந்திரன் போட்டியிடுகின்றார்.


கோவை: மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத் துணைத் தலைவர் மகேந்திரன் போட்டியிடுகின்றார்.

மக்களவைத் தேர்தலில் இந்தியக் குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. இதற்கிடையே மக்கள்நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்களின் நேர்காணல் கடந்த வாரம்சென்னையில் நடைபெற்றது. கல்வித் தகுதி, தொகுதி மக்களுக்கு ஆற்றிய சேவைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்கட்டமாக 21 பேர்களின் பெயர்களை கமல்ஹாசன் சென்னையில் கடந்த 20-ம் தேதி வெளியிட்டார்.இதில், கமீலா நாசர் மத்திய சென்னையிலும், முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா வட சென்னையிலும் போட்டியிடுகின்றனர். இந்த இருவரைத் தவிர, வேறு அறிமுகமான நபர்கள் யாரும் பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை கமல்ஹாசன் அறிவித்தார்.

கமல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் போட்டியிடவில்லை. சிவகங்கை தொகுதியில் பாடலாசிரியர் சினேகனும், கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத் துணைத் தலைவர் மகேந்திரனும் போட்டியிடுகின்றனர்.

மக்கள் நீதி மய்யக் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்:

சிவகங்கை- சினேகன்

கோவை- மகேந்திரன்

காஞ்சிபுரம் - எம்.தங்கராஜ்

திருவண்ணாமலை - அருள்

ஆரணி - வி.ஷாஜி

கள்ளக்குறிச்சி - கணேஷ்

தென்சென்னை - ரங்கராஜன்

மதுரை - அழகர்

தஞ்சை - ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ்

கடலூர் - அண்ணாமலை

தென்காசி - முனீஸ்வரன்

திருப்பூர் - சந்திரகுமார்

பெரம்பலூர் - அருள்பிரகாசம்

நாமக்கல் - ஆர்.தங்கவேலு

ஈரோடு - சரவணக்குமார்

ராமநாதபுரம் - விஜயபாஸ்கர்

கரூர் - ஹரிஹரன்

மேலும் தெரிந்துகொள்ள : டாக்டர். மகேந்திரன், 'மய்யம் அமைப்பில், தன்னுடைய பங்கு, வியூகம், வழிகாட்டுதல்' குறித்து சிம்ப்ளிசிட்டியிடம் கலந்துரையாடும் பிரத்யேக நேர்காணல்  https://youtu.be/IdpcukN_yaY

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...