கோவை : கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் இன்றோடு இரண்டாவது நாளாக பற்றி எரிந்து வரும் தீயினால் ஏற்படும் நச்சுப் புகையால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளலூர் பகுதியில் சுமார் 690ஏக்கர் பரப்பளவில் குப்பைகிடங்கு உள்ளது .இந்த குப்பைக்கிடங்கில் தினசரி 700 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் மாநகராட்சியால் லாரிகள் மூலம் கொட்டப்பட்டு வருகிறது. அதேபோல இந்தக் குப்பைகளை அழிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தாலும் குப்பை கிடங்கின் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பதும் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதும் இந்த புகை மூட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது. மேலும் நிலத்தடி நீர் பாதிப்பு, இந்த குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றம் ஆகியவை வெள்ளலூரை சுற்றியுள்ள பொது மக்களுக்கு தொற்றுநோய்கள், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. இது போதவில்லை என்று சமூக விரோதிகளின் செயல்களால் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளில் அடிக்கடி தீ பிடித்து பொதுமக்களுக்கு சிரமத்திலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
அதே போல இந்த குப்பை கிடங்கில் இதுவரை பலமுறை தீப்பிடித்துள்ளது ஆனால் எப்படி பிடிக்கிறது ? யார் பற்ற வைப்பது ? என்பதற்கான முடிவு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இரண்டு நாட்களாக தொடரும் தீ ;

நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் குப்பை கிடங்கில் பிடித்த தீயானது தற்போது வரை தொடர்ந்து எரிந்து வருகிறது. மேலும் அதிக அளவில் பரவி வரும் தீயால் வெள்ளலூரை சுற்றியுள்ள சுமார் ஐந்து கிலோமீட்டர் பகுதியில் உள்ள பொது மக்கள் நச்சு புகையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தீயை அணைக்கும் பணியில் கிட்டதட்ட மாநகரில் உள்ள ஆறு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு மாநகராட்சி தண்ணி லாரி உதவியுடன் தண்ணீர்கள் நிரப்பப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் இரவு பகல் பாராமல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் தீரத்தீர வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தீயானது தற்போதுவரை அணைந்த பாடில்லை. மேலும் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையர் என பல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மேற்பார்வையிட்டு சென்றுள்ளனர்.
பெரிய தீ விபத்துக்களை தடுக்க;
வெள்ளலூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தொடரும் தீ விபத்தை தடுக்க 24 மணி நேரமும் மாநகராட்சி ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல பெரிய பரப்பளவைக் கொண்ட உள்ள இந்த குப்பை கிடங்கில் லேசாக தீப்பிடித்தாலே விரைவில் பரவும் சூழல்கள் உள்ளதால் குப்பைக் கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் தீயை அணைக்க கூடிய வசதியுடைய பைப்லைன்களை அமைத்தால் இதுபோன்ற பெரும் சிரமங்களை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல மாநகரில் உள்ள தீயணைப்பு வாகனங்களும் தீயணைப்பு துறையினரும் குப்பை கிடங்கில் அடிக்கடி தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் மாநகரில் திடீர் தீ விபத்துகள் ஏற்பட்டால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழலும் உள்ளது.
வெள்ளலூர் பகுதி மக்களின் கோரிக்கை ;
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் வெள்ளலூர் பகுதி மக்களின் வாழ்க்கை மாறவில்லை. மேலும் தேர்தலின்போது வாக்குக்காக மக்களை தேடிச் செல்லும் அரசியல்வாதிகள் வெள்ளலூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்பதே நிதர்சனம். இந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று பலமுறை வெள்ளலூரை சுற்றியுள்ள பகுதி மக்கள் உண்ணாவிரதம், போராட்டம், சாலை மறியல் என பல முறைகளில் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதேபோல மாநகராட்சி அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், முதல்வர் என பலதரப்பட்ட அதிகாரிகளிடமும் தங்கள் கோரிக்கைகளை வைத்து விட்டனர். ஆனால் அந்த மக்களின் கோரிக்கைகள் தற்போது வரை நிறைவேறவில்லை.
இதுகுறித்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டானியல் ஏசுதாஸ் கூறியதாவது :
கடந்த இரண்டு நாட்களாக எரியும் தீயினால் ஏற்படும் புகையால் வெள்ளலூரை சுற்றியுள்ள போத்தனூர் சுந்தராபுரம் சிங்காநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் குப்பை கிடங்கு அருகே உள்ள குடியிருப்புகளில் புகை மூட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு கூட வெளி வரமுடியாதபடி அவதிப்பட்டு வருகின்றனர்.
தீ பரவுவதற்கு முன்பாகவே தீயை அனைத்து இருந்தால் இவ்வளவு பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறாது. ஆனால் தீ பிடிக்க ஆரம்பித்து பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்கும் தீ வேகமாக பரவி வருகிறது. ஆகவே இந்தப் பகுதியில் நிரந்தரமாக தீயை அணைப்பதற்கான உரிய வசதிகள் தயார் நிலையில் இருந்தால் இது போன்ற பெரிய விபத்துகள் ஏற்படாது. குப்பை கிடங்கு பணிக்காக பல கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது அப்படி ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் முறையாக தீயை அணைக்க தண்ணீர் வசதிகள் அமைத்து இருந்தால் கூட இதுபோன்ற சிக்கலை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தார்.