சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என அக்கட்சியின் டெல்லில் தலைமை அறிவித்துள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என அக்கட்சியின் டெல்லில் தலைமை அறிவித்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் (தமிழகம்-9, புதுச்சேரி-1) காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சிவகங்கையைத் தவிர மற்ற தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக, இன்று கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ‘ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளார். 

அதனால், இந்தியா முழுவதும் சிவகங்கை உள்பட 40 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை’ என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மேலும் 10 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை இன்று மாலை வெளியிட்டது. அதில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...