கமலின் மருத்துவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் பறக்கும் படை

கோவை : முறையான அனுதியில்லததால் தனியார் பள்ளியில் நடந்து கொண்டிருந்த கமல்ஹாசனின் மருத்துவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர்.


கோவை : முறையான அனுதியில்லததால் தனியார் பள்ளியில் நடந்து கொண்டிருந்த கமல்ஹாசனின் மருத்துவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர்.

மக்கள் நீதி மய்யத்தின் 2-வது வேட்பாளர் பட்டியலை நடிகர் கமல்ஹாசன் கோவையில் இன்று மாலை அறிவிக்க இருக்கிறார். இந்த நிலையில், பெர்க்ஸ் பள்ளியில் மருத்துவர்களுடனான ஒரு மணி நேரம் கூடிய சந்திப்பை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டு வந்தார். அப்போது, முறையான அனுமதி இன்றி இந்த சந்திப்பு நடந்து கொண்டிருப்பதாகக் கூறி, தேர்தல் பறக்கும் படையினர், அதனை தடுத்து நிறுத்தினர். இதனால், மருத்துவர்கள் மற்றும் பிற தரப்பினர் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு, அரசியல் அல்லாத சந்திப்பு தான் நடந்து கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தினரிடம் கேட்ட போது, “இந்த சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டு, எங்களது கட்சி உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம். இது குறித்து அதிகாரிகளிடம் வாய்மொழியில் அனுமதி வாங்கியுள்ளோம். இருப்பினும், இந்தக் கூட்டத்தை தேர்தல் பறக்கும் படையினர் பாதியில் தடுத்து நிறுத்தியது ஏமாற்றமளிக்கும் செயலாகும். இது தொடர்பாக முறையான செய்தி வெளியிடுவோம்,” என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...