நீலகிரி : நீலகிரியில் எலக்ட்ரானிக்' ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சியை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு உதகை ரெக்ஸ் பள்ளியில் நடைபெற்றது. இதில், நீலகிரி தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கு, 'எலக்ட்ரானிக்' ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும், மற்றும் மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இதில், வாக்கு சாவடிகளில் பணிபுரிய உள்ள முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, செய்முறை விளக்க பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், உதகை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பாபு மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.