வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை துரிதமாக அணைத்த மாநகராட்சி ஊழியர்கள்

கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை தனி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தின் துரித நடவடிக்கையின் மூலம் தீயை அணைத்தனர்.

கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை தனி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தின் துரித நடவடிக்கையின் மூலம் தீயை அணைத்தனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் நேற்று இரவு திடீரென விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் வாகனங்களைக் கொண்டு தண்ணீர் அடித்து தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். 



“எதிர்காலத்தில் இதுபோன்ற தீ பரவும் சம்பவங்களை தடுக்கும் வகையில், குப்பைக்கிடங்கின் மேட்டை பொக்லென் இயந்திரங்களைக் கொண்டு குப்பை குவியலாகப் பிரித்து பராமரிப்பு செய்யப்படவுள்ளது. கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு 5 துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை விழிப்புடன் மேற்கொள்வார்கள். தற்பொழுது இயங்கி

வருகிற 8 தண்ணீர் டேங்கர் லாரியுடன் கூடுதலாக ஐந்து லாரிகளும், இரண்டு பொக்லைன் இயந்திரங்களோடு கூடுதலாக இரண்டு பொக்லைன் இயந்திரங்களும், மேலும் ஒரு புல்டோசர் வாகனமும் வாடகைக்கு அமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளார்கள். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கொண்டு குப்பை மேட்டை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன,” என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்தார்.



முன்னதாக, தீ விபத்து ஏற்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி செயற்பொறியாளர்

சரவணக்குமார், உதவிப் பொறியாளர் ரவிக்கண்ணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...