நீலகிரி : உதகையில் நெடுஞ்சாலை வேலை செய்து கொண்டிருக்கும் போது, கம்பி சரிந்து விழுந்த விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து உதகை வரை தேசிய நெடுஞ்சாலை சார்பில் சாலைகளை அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உதகை லவ்டேல் பகுதியில் பெரிய பாலம் ஒன்று அமைக்கும் பணியினை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வந்தனர். அப்போது, கான்க்ரீட் தளம் அமைப்பதற்காக கம்பி கட்டும் பணி நடைபெற்று வந்தது. திடீரென கம்பி சரிந்து விழுந்த விபத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சம்சுல் (30) என்பவர் கம்பி இடுக்குகளில் மாட்டிக் கொண்டார். இதில், அவரது கை, கால், கழுத்து தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் கம்பி குத்தியதால் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவருடன் பணி செய்யும் சக பணியாளர்கள் அவரை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.