கோவை : நாடாளுமன்ற தேர்தலில் பச்சை தமிழகம் கட்சி போட்டியிடாது எனவும், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு ஆதரவு எனவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சு.ப. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கோவையில் அகில இந்திய மக்கள் மேடையின் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் கோரிக்கை சாசன வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அணு உலை எதிர்ப்பாளருமான சு.ப. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :-நாடாளுமன்ற தேர்தலில் பச்சை தமிழகம் கட்சி போட்டியிடாது. தனிப்பட்ட எந்த கட்சிக்கும் ஆதரவும் தராது. மத்திய மோடி அரசு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ளது பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும். மதவெறி, சாதிவெறி, பண வெறி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதால், பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு ஆதரவளிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.