நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருவதால், அணைகளில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர், தேவைக்கான தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களாக முக்கூருத்தி, அப்பர்பவானி, போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி, அவலாஞ்சி,எமரால்டு, பைக்காரா, பில்லூர் மற்றும் ரேலியா பல்வேறு அணைகள் உள்ளன.

இந்த அணைகளில் உள்ள நீர், மின்உற்பத்திக்கு மட்டுமில்லாமல், குடிநீர் தேவைகளுக்காகவும், மலைத் தோட்ட காய்கறி விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு நல்ல மழை பெய்து வந்தது. குறிப்பாக, பைக்காரா, அப்பவர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்க்கன் போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் மின்உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பைக்காரா அணையில் மொத்த கொள்ளவான 100 அடியில் 87 அடி நீர்இருப்பும், கிளன்மார்கன் 33 அடியில் 27 அடி நீர் இருப்பும், பார்சன்ஸ்வேலி 58 அடியில் 53 அடி நீர் இருப்பும், போர்த்தி மந்து அணையில் 132 அடியில் 130அடியும், அப்பர்பவானியில் 210 அடியில் 175 அடி நீர் இருப்பும், அவலாஞ்சியில் 171 அடியில் 145 அடியும், எமரால்டு அணையில் 184 அடியில் 152 அடியும், குந்தாஅணையில் 89 அடியில் 78 அடியும், கெத்தையில் 156 அடியில் 142 அடியாகவும் நீர் இருப்பு இருந்து வந்தது.
தற்போது, இந்த அணைகளில் சராசரியாக 30 முதல் 40 சதவீதம் வரை நீர் இருப்பு குறைந்துள்ளதால், குடிநீர், காய்கறி விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.