கலக்கும் நோட்டா, கலங்கும் கட்சிகள்! நோட்டா வாக்குகளால் என்ன பயன்?

”மச்சி, எலெக்சன் வரப்போகுது. யாருக்கு ஓட்டு போட போற?” “எந்த கட்சியுமே சரியில்லடா, சோ… நோட்டாக்கு தான்” இப்படி இளைஞர்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க இருப்பதை பெருமையாக கருதி பேசுவதை கேட்டிருப்போம்.

”மச்சி, எலெக்சன் வரப்போகுது. யாருக்கு ஓட்டு போட போற?” “எந்த கட்சியுமே சரியில்லடா, சோ… நோட்டாக்கு தான்” இப்படி இளைஞர்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க இருப்பதை பெருமையாக கருதி பேசுவதை கேட்டிருப்போம். அப்படி சொல்பவர்களிடம் “நோட்டா என்றால் என்னவென்ன தெரியுமா?” என கேட்டால் “யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை” என்பார்கள். “அது எப்படி வந்தது? அதனால் என்ன பயன்?...” என கேள்விகளை அடுக்கினால் பதில் தெரியாமல், திருதிருவென முழிப்பார்கள். 

தேர்தலுக்கு தேர்தல் நோட்டாவிற்கு வாக்குகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. அரசியல் கட்சிகளிடம் கலகத்தை ஏற்படுத்தும் வார்த்தையாக நோட்டா மாறியிருக்கிறது.

நோட்டாவின் கதை

நோட்டா (NOTA-None Of The Above) என்பதன் சுருக்கமே. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியில் இடம் பெற்றிருக்கும் நோட்டா என்பதற்கு, மேற்கண்ட யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பது தான். 

முன்பெல்லாம் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கோ, சுயேட்சைகளுக்கோ வாக்களிக்க விருப்பமில்லை என்றால், தேர்தல் புறக்கணிப்பை தவிர வேறு வழியில்லை. இதனால் வாக்கு பதிவு சதவீதம் குறைந்து வந்தது. அத்தகைய எண்ணம் கொண்டவர்களையும் வாக்குச் சாவடி மையத்திற்கு அழைத்து வரவும், வாக்களிக்க வைக்கவும் ’49 ஒ’ கொண்டு வரப்பட்டது. ஆனால் 49 ஒ விற்கு வாக்களிப்பது என்பது சிக்கலான நடைமுறையை கொண்டிருந்தது.

ஏனெனில், வாக்குச்சாவடி மையத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் வாக்களிக்க விருப்பமில்லை என்பது தெரிவித்து, குறிப்பிட்ட படிவத்தில் கையெழுத்திட வேண்டும். வெளிப்படையாக எதிர்ப்பை பதிவு செய்ய வாக்குச்சாவடி முகவர்கள் விடமாட்டார்கள். சிக்கலான இந்த நடைமுறையினால், பயம், இரட்டை வேலை காரணமாக பலரும் 49 ஒ வை பயன்படுத்த தயக்கம் காட்டினர். அதையும் மீறி அப்படி கஷ்டப்பட்டு வாக்களித்தவர்களும் உண்டு. ஆனால் அவை செல்லாத வாக்குகளில் தான் சேர்க்கப்படும்.

இந்த நடைமுறை வாக்காளர்களின் ரகசியம் காக்கும் உரிமையை பறிப்பதாக உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பயனாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா சேர்க்கப்பட்டது.

கலக்கும் நோட்டா, கலங்கும் கட்சிகள்

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிப்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. அதை இரகசியமாக தெரிவிக்கும் வசதியும் அவர்கள் உரிமை என உச்ச நீதிமன்றம், நோட்டாவை வாக்குப்பதிவு இயந்திரத்தில் சேர்க்க உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் முதல் முறையாக நோட்டா பயன்படுத்தப்பட்டது, ஏற்காடு இடைத்தேர்தலில் தான்.

2014 ம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் வாக்களர்களுக்கு நோட்டா உரிமை வழங்கப்பட்டு வருகிறது. 

தேர்தலுக்கு தேர்தல் நோட்டாவிற்கு வாக்களிப்பது என்பது அதிகரித்து வருகிறது. முதல் முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் 'நோட்டா' தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், நோட்டாவிற்கு வாக்களிப்பதை இளைஞர்கள் பெருமையாக கருதுகின்றனர். பல அரசியல் கட்சிகள் வாங்கும் வாக்குகளை விட, நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகி வருகின்றன. 

நோட்டா பயன்பாடுகள் என்பது எதிர்ப்பை பதிவு செய்தல் மற்றும் கள்ள வாக்குகளை தடுக்கவும் உதவும். சில பகுதிகளில் குறிப்பிட்ட காரணங்களுக்காக மக்களின் எதிர்ப்புகளை அரசியல் கட்சிகளுக்கு காட்டும் வகையில் அதிகளவில் நோட்டாவை பயன்படுத்துவது என்பதும் இருந்து வருகிறது.

நோட்டா வந்த பின்னர் பல அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. நோட்டாவினை இரத்து செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் கூறுமளவு, தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளி நோட்டா முன்னேறி வருகிறது. இது கட்சிகளின் பலவீனம் வெளிப்படையாக காட்டுகிறது. இதனால் சமூக வலைதளங்களில் அக்கட்சிகள் கிண்டலுக்கு உள்ளாகுகின்றன. 

நோட்டாவினால் என்ன பயன்?

”ஒரு தொகுதியில் வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிகமாக பதிவானல் தேர்தல் இரத்து செய்யப்பட்டு, மறு தேர்தல் நடத்தப்படும். போட்டியிட்ட வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்ற ஒரு செய்தி தேர்தல் காலங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மை அல்ல, வதந்தி.

ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்குகள் இருப்பதாக வைத்து கொள்வோம். 999 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்தாலும், ஒற்றை வாக்கு வங்கியவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். நோட்டாவை விட குறைவாக வாக்கு வங்குவது என்பது அரசியல் கட்சிகளின் பலவீனத்தை வெளிக்காட்டவே உதவும். 

நோட்டா என்பது எதிர்ப்பின் அடையாளம். இதன் மூலம் மக்களின் எதிர்ப்பை பதிவு செய்ய முடியும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதான அதிருப்தியை, நம்பிக்கையின்மையை வெளிக்காட்ட உதவும். அவ்வளவு தான்!!

நோட்டா என்பது தேர்தல் சீர்திருத்தங்களின் ஒரு முயற்சி தான், இன்னும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. அதேசமயம் அரசியல் கட்சிகள் தரமான வேட்பாளர்களை தேர்தல்களில் நிறுத்த செய்ய உதவலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. இதற்கு பல காலமாகலாம். படிப்படியாக தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். ஆனால், இதுபோன்ற குறைபாடுகளை களைந்து, நோட்டாவிற்கு பவர் கொடுக்க வேண்டுமெனவும் சில அமைப்புகள் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

எது எப்படி இருப்பினும், நோட்டா குறித்து ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், 'செல்லக்காசு'. ஏனெனில், நோட்டா வாக்குகளால் எந்த பயனும் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. ஆட்சியாளர்களாக யார் வர வேண்டுமென்பதை விட, யார் வரக்கூடாது என்பதையும் உணர்ந்து தகுதியான ஒருவருக்கு வாக்களிப்பதே சரியானதாக இருக்கும்.

அதேசமயம் நோட்டா என்பது ஜனநாயக வழியில் எதிர்ப்பை பதிவு செய்யும் ஒரு வாய்ப்பு என்பதில் ஐயமில்லை!

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...