தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கண்காணிப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

 

இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் தகவல் அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பிரிவு, கட்டுப்பாட்டு அறை, ஒற்றை சாளர முறை பிரிவு, ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றளிக்கும் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றது. 

அதுபோலவே, வாகனத் தணிக்கை மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் வாகனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பணிகள் மேற்கொள்ளுவதை ஜி.பி.எஸ் கருவி மூலம் கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலர் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு பிரிவில் கண்காணிக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. ராசாமணி இன்று ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து அவர் கூறியதாவது :- கோவை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் சிறப்பான முறையில் நடத்திடவும், 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தியும் பல்வேறு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், 1950 கட்டணமில்லா தொலைப்பேசி சேவையின் வாயிலாக வாக்காளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகின்றது. அதுபோலவே, கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் கண்காணிப்பு மற்றம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வரும் 30 பறக்கும் படை மற்றும் 28 நிலையான கண்காணிப்பு படை வாகனங்கள் என 58 வாகனங்களைக் கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாகனத் தணிக்கை மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் வாகனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பணிகள் மேற்கொள்ளுவதை ஜி.பி.எஸ் கருவி மூலம் கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு பிரிவில் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதற்கென மாவட்ட வருவாய் அலுவலர் தலையில் 18 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுக் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர், இவ்வாறு கூறினார். 

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ஒற்றைச் சாளர பிரிவு, ஊடகப் பிரிவு, மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகம் உள்ளிட்ட பிரிவுகளிலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...