மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை அ.தி.மு.க. கணிக்க முடியாது : கோவையில் கமல் பேட்டி

கோவை: மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை அ.தி.மு.க. கணிக்க முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விமர்சனம் குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.


கோவை: மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை அ.தி.மு.க. கணிக்க முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விமர்சனம் குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். 

கோவையில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பெருவிழா நாளை மாலை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகின்றது. இதில், பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் கமலஹாசனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 



இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சி காணாமல் போய்விடும் என அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அவர்கள் பிர்த்தனை எல்லாம் எங்கள் எதிர்காலம் என்று எண்ண முடியாது. எங்களின் எதிர்காலத்தை அவர்களால் கணிக்கவும் முடியாது, என்றார். மேலும், 21 வேட்பாளர் பட்டியலில் 8 தொழில் அதிபர்கள், 3 மருத்துவர், 3 வழக்கறிஞர் என பணம் படைத்தவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகக் கட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லையே என்ற கேள்விக்கு, நாளை மாநாட்டில் இது குறித்து விளக்கப்படும். குறைகள் இருக்காது எனக் கூறினார். 

மேலும், கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருவது குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்ததாவது, கட்சியில் இருந்து சென்றவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் அல்ல என்றும், அவர்கள் சென்றதால் இதனை நான் சொல்லவில்லை, என தெரிவித்தார். 

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...