திருப்பூர் : உடுமலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, தனியார் நகை குடோனிற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

உடுமலை அருகே அந்தியூர் பகுதியில் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தோ்தல் அதிகாரி சத்யா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உடுமலை பகுதியில் தனியார் நகை கடையிலிருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கோவையில் உள்ள குடோனிற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி தோ்தல் அதிகாரிகள் சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள் இருப்பதாக நகை கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், சந்தேகமடைந்த அதிகாரிகள் முறையான ஆவணங்களை காண்பித்து நகைகளை எடுத்துச் செல்லுமாறு கூறினர். இதனை தொடர்ந்து, நகைகள் கொண்டு வரப்பட்ட வாகனத்தை உடுமலை வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்போடு நிறுத்தி வைத்துள்ளனர்.
தனியார் நகை கடை நிர்வாகத்தினர் கோவையில் இருந்து உரிய ஆவணங்களைக் கொண்டு வருவதால், நகைகளை வாகனத்தில் இருந்து இறக்காமல் பாதுகாத்து வருகின்றனர். "இரவுக்குள் ஆவணங்களைக் காண்பிக்கும் பட்சத்தில், உரியவர்களிடம் நகைகள் ஒப்படைக்கப்படும். இல்லையெனில், அரசு கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்படும்," என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.