First on: கோவையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் 40 ஆயிரம் புதிய வாக்காளர்கள்

கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய தேர்தல் வாக்காளர்களை இணைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 40 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய தேர்தல் வாக்காளர்களை இணைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 40 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கோவை மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 61 ஆயிரத்து 961 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில், ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 17 ஆயிரத்து 683 பேரும், பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 43 ஆயிரத்து 967 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 311 பேரும் அடங்குவர். 

அதன் பின்பு, விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும் பணிகளும், 18 வயது பூர்த்தியடைந்து வாக்களிக்க தகுதியுள்ள புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 3,072 வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்களும், வாக்காளர்களை சேர்க்கும் பணிகளும் மார்ச் 16-ம் தேதி அன்று முடிவு பெற்றது. தற்போது, ஜனவரி 31-ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன், புதிதாக இணைக்கப்பட உள்ள வாக்காளர்களை சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜனவரி 31-ம் தேதிக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்காளர் சேர்க்கை முகாம்களில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனை இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்," என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...