மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அறிமுக கூட்டம்: கோவையில் களமிறங்குகிறாரா கமல்ஹாசன்?

கோவை: மக்கள் நீதி மய்யம். இந்த தேர்தல் களத்தின் புது வரவு. கட்சி துவங்கி ஒராண்டு மட்டுமே கடந்த நிலையில், எதிர்கொள்ளும் முதல் தேர்தல். டார்ச் லைட் சின்னத்தில் தனித்து தேர்தல் களம் காண்கிறது, ம.நீ.ம..



கோவை: மக்கள் நீதி மய்யம். இந்த தேர்தல் களத்தின் புது வரவு. கட்சி துவங்கி ஒராண்டு மட்டுமே கடந்த நிலையில், எதிர்கொள்ளும் முதல் தேர்தல். டார்ச் லைட் சின்னத்தில் தனித்து தேர்தல் களம் காண்கிறது, ம.நீ.ம..



நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி கட்சியை சேராதவர்கள் கூட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். 



21 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர் தொழிலபதிபர்கள். 3 மருத்துவர்கள், 5 வழக்கறிஞர்கள், ஒரு முன்னாள் நீதிபதி, ஒரு ஐபிஎஸ் அதிகாரி என வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 



இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், ஒரு இரசிகர் மன்ற நிர்வாகிக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்பது தான். இந்நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீடு ஆகியவை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுகிறா? என்ற கேள்வியை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 



ஓட்டு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள், ஆனால் களத்திற்கு வாருங்கள்..!

மய்ய அரசியல் மதசார்பின்மை கொள்கை. நடுநிலை அரசியல் நிலைப்பாடு என மதுரையில் துவங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம். அப்போது “நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும்” என்றார், கமல்ஹாசன். கட்சி துவக்க விழா நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். 



கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காணொளி காட்சி மூலம் வாழ்த்தினார். 



அரசியல் பயணத்தை தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மண்ணில் இருந்து கமல்ஹாசன் துவக்கினார். அதிமுக அமைச்சர்களை எதிர்த்து அரசியல் களம் கண்ட கமல்ஹாசன், கிராம சபை கூட்டங்கள் மூலமாக மக்களை தேடி சென்றார். 



செல்லும் இடங்களில் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. கல்லூரிகளில் மாணவர்களிடம் அரசியல் பேசிய கமல், ”ஓட்டு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள், ஆனால் களத்திற்கு வாருங்கள். உங்கள் வயதில் நான் அரசியலில் வந்திருக்க வேண்டும், வராமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதனால் தான் நீங்களாவது இந்த வயதிலேயே வந்துவிடுங்கள்” என்றார்.



கூட்டங்கள் வாக்குகளாக மாறுமா?



கமலை பார்க்க கூடிய கூட்டங்கள் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறி தான். திரையில் கண்ட நாயகனை நேரில் பார்க்க கூடிய கூட்டம், மக்களின் ரசிக மனப்பான்மையை காட்டுகிறது எனவும், இவை ஒருபோதும் வாக்குகளாக மாறாது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. 



நடிகர் ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர் கூட்டம், கமல்ஹாசனுக்கு இல்லை என்பதே உண்மை. டிவிட்டர் அரசியல்வாதியான கமல்ஹானுக்கு, கள அனுபவம் குறைவு. அதிலும் கமலின் அரசியல் கருத்துக்கள், புரியாத புதிர்கள். சாதாரண வாக்களரிடம் கமலின் மய்ய அரசியல் எடுபடாது. அதேசமயம், மாற்றத்தை விரும்பும் மக்கள், ம.நீ.மவிற்கு வாக்களிக்க கூடும். கல்லூரி மாணவர்கள், இரசிகர்கள், புதிய வாக்காளர்கள் ஆதரவு கிடைத்தாலும், எந்த தாக்கத்தையும் இந்த தேர்தலில் கமல்ஹாசனால் ஏற்படுத்த முடியாது என்பதே கணிப்பாக உள்ளது. 

கோவையில் கமல்ஹாசன்?

ம.நீ.ம சார்பில் மீதமுள்ள 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் கோவையில் வெளியிடப்பட உள்ளது. அதில் கமல்ஹாசன் எங்கே போட்டியிடுகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.



ம.நீ.ம துணை தலைவர் மகேந்திரன் தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. கோவையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் என்பது கோயம்புத்தூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதற்கான அறிகுறி என சொல்லப்படுகிறது. 

ஆனால் நடிகர் கமல்நாசன் நட்பு பாராட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜகவை எதிர்த்து கோயம்புத்தூரில் நேரடியாக போட்டியிடுகிறது. இரு தரப்பும் எளிதில் வெல்ல முடியாது எனவும், வெற்றி, தோல்வி என்பது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அமையுமென கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதியில் கமல்ஹாசன் நேரடியாக களமிறங்குவாரா? அரசியல் களத்தில் நட்பு முரணான போட்டியிடுவாரா? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

வருகின்ற தேர்தல் என்பது யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதை விட, யாரை தேர்ந்தெடுக்க படக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். அதற்கேற்பவே வாக்களிக்க உள்ளனர். 



உறுதிப்படுத்தாத இந்த தகவல் உறுதியானால் யாருக்கு சாதகமாக அமையும்?...



நடிகர் கமல்ஹாசனுக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் ஒரு நட்சத்திர வேட்பாளர் தான். ஆனால் கோவையில் ம.நீ.ம கட்சி செயல்பாடுகளும், மக்கள் தொடர்பும் வெகு குறைவு. ஆனால் தொழில் துறை மற்றும் மக்கள் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே. பரிசோதனை முயற்சி பயனளிக்காமல் கூட போகலாம். அதேசமயம் மாற்றத்தை விரும்புவோர், புதிய வாக்களர்கள், அதிமுக, பாஜக எதிர்ப்பு ஆகிய வாக்குகள் தான் ம.நீ.மவின் பலம். இது கோவையில் போட்டியிட்டால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடும். மார்க்சிஸ்ட் கட்சிக்கு செல்லும் வாக்குகள், நட்சத்திர வேட்பாளரான கமல்ஹாசனுக்கு மாற வாய்ப்புள்ளது. இதனால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறி, பாஜக வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

கமல்ஹாசன் போட்டியிடுவது சொந்த மண்னான இராமநாதபுரமா? அல்லது பரிசோதனை முயற்சியாக கோவையில் போட்டுயிவாரா? என்பது நாளை உறுதியாகி விடும்!

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...