கோத்தகிரியில் தேயிலைத்தூளில் கலப்படம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட கலப்படத் தூள் பறிமுதல்

நீலகிரி : கோத்தகிரியில் தேயிலைத் தூளில் கலப்படம் செய்வதற்காக தேயிலை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட கலப்படத் தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி : கோத்தகிரியில் தேயிலைத் தூளில் கலப்படம் செய்வதற்காக தேயிலை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட கலப்படத் தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக, பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி வந்த லாரியை குஞ்சப் பண்ணை நுழைவு வரி வசூலிக்கும் முருகன் மற்றும் சோதனைச் சாவடி தலைமை காவலர் பாலா ஆகியோர் பிடித்து, தேயிலை வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



இதைத் தொடர்ந்து, விரைந்து வந்த தேயிலை வாரிய அதிகாரிகள் லாரியில் சோதனை மேற்கொண்டனர். அதில், தேயிலைத்தூளில் கலப்படம் செய்வதற்காக 7 டன் எடை கொண்ட கலப்பட தேயிலைத்தூள் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து லாரியின் ஓட்டுநர் சந்தோஷ் மற்றும் முருகேஷ் என்பவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, கோத்தகிரியில் பிடிபட்ட கலப்பட தேயிலை தூளை எடுத்து வந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நாக்குபெட்டா விவசாய சங்கத்தின் மூலம் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...