நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3 கரடிகளில் ஒரு கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கோத்தகிரி அருகே எஸ். கைகாட்டி, சன்ஷைன் நகர், கஸ்தூரிபா நகர், கக்குளா உள்ளிட்ட கிராம மக்கள் கக்குளா மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஒருவாரங்களாக நள்ளிரவில் எஸ். கைகாட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலின் கதவை உடைத்து உள்ளே செல்லும் 3 கரடிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்குகளில் இருந்த எண்ணெயை குடித்துவிட்டு, கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் சிதறடித்து விட்டு சேதப்படுத்திச் சென்று விடுகின்றன.
கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி தொல்லை செய்து வருவதால், பணிக்கு சென்று விட்டு மாலை மற்றும் இரவு நேரங்களில் வீடு திரும்பும் தொழிலாளர்களும், வாகனங்களில் செல்வோரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, இக்கரடிகளைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் கோயிலின் நுழைவு வாயிலின் முன்பு கூண்டுகள் வைத்து அப்பகுதியில் முகாமிட்டு கரடிகளை கண்காணித்து வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த 3 கரடிகளில் ஒரு கரடி மட்டும் கூண்டில் சிக்கியது. மேலும், மற்ற கரடிகள் கடும் சப்தம் எழுப்பியதால், வனத்துறையினர் உடனடியாக வந்து கூண்டின் அருகே இருந்த இரண்டு கரடிகளையும் விரட்டினர். பின்னர், கூண்டில் சிக்கிய 7 வயதுள்ள பெண் கரடியைப் பாதுகாப்புடன், அவலாஞ்சி வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் எஞ்சிய இரண்டு கரடிகளை பிடிக்க வனத்துறையினர் மீண்டும் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளனர்.