திருப்பூரில் நிலபுரோக்கர் வீட்டில் ரூ. 14 லட்சம் ரொக்கம் கொள்ளை

திருப்பூர் : திருப்பூரில் நிலபுரோக்கரின் வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து ரூ. 14 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் நிலபுரோக்கரின் வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து ரூ. 14 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

திருப்பூர் 15 வேலம்பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர், நில புரோக்கராக இருந்து வருகிறார். இவரது மனைவி சத்தியசுந்தரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கணிணி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இருவரும் வழக்கம்போல பணிக்கு சென்றுவிட்ட நிலையில், அவர்களது வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவின் லாக்கரையும் உடைத்து, அதனுள் இருந்த ரூ. 14 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...