பழங்குடியின பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு முதன்முறையாக மின் இணைப்பு : வாக்களிக்க ஆர்வம் காட்டாத மக்கள்

கோவை : மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்து வரும் நிலையில், தூமனூர் வாக்குச்சாவடிக்கு முதன்முறையாக மின் இணைப்பு கொடுத்திருந்தாலும், தங்களுக்கு வாக்களிக்க ஆர்வம் இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை : மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்து வரும் நிலையில், தூமனூர் வாக்குச்சாவடிக்கு முதன்முறையாக மின் இணைப்பு கொடுத்திருந்தாலும், தங்களுக்கு வாக்களிக்க ஆர்வம் இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

கோவை நகரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தடாகம் வனப் பகுதியில் தூமனூர், செம்புக்கரை மற்றும் காட்டுசாலை (மிளகாயம்பதி) உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. இதில், 127 குடும்ப அட்டைதாரார்கள் உள்ளனர். அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர்கள் கணக்கெடுப்பில் 159 ஆண்கள், 172 பெண்கள் என 331 வாக்காளர்கள் இந்த கிராமங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு (2018) இந்த கிராமங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை 334 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கிராமத்திற்கான வாக்குச்சாவடியாக இருக்கும் தூமனூர் நடுநிலைப் பள்ளியில் மின் இணைப்பு இல்லை. எனவே, சோலார் அல்லது ஜெனரேட்டர் மூலம் கடந்த தேர்தல் நடத்தப்பட்டது. கிராமங்களுக்கு மின்சார வசதி கொடுக்கப்பட்ட போது, இந்தப் பள்ளியிலும் மின் இணைப்பு கொடுக்கப்பதற்கான பணிகள் நடந்தது. ஆனால், எந்தப் பணிகளும் முழுமையாக நடக்காததால், மின் இணைப்பு பணிகள் பாதியில் நிற்கின்றன. 

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தூமனூர் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு மட்டும் முதல்முறையாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி முறையிடும் மக்களை நேரில் சந்திக்காத அதிகாரிகள், தேர்தலுக்காக பாரபட்சத்துடன் செயல்படுவதால், வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. 

 

கடந்த 2016-ம் ஆண்டு பழங்குடியின கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட பசுமை வீடுகள் திட்டத்தில், அதிகபட்சமாக தூமனூர் கிராமத்தைச் சேர்ந்த 42 பயணிகள் பயனடைந்தனர். முன்னதாக, எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் குழு வீடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், பசுமை வீடுகள் திட்டத்தில் மேலும் 2 பயனாளிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு கட்டங்களாக ரூ. 2.10 லட்சத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு தூமனூர், செம்புக்கரை மற்றும் காட்டுசாலை கிராமங்களில் தொடங்கப்பட்ட பசுமை வீடுகள் திட்டத்தில், இதுவரை ஒரு வீடும் கட்டி முடிக்கவில்லை என்பது அக்கிராம மக்களின் ஏமாற்றமாகவே உள்ளது. 



கிராம மக்கள் தங்கள் தற்போது குடியிருந்து வரும் பகுதியிலேயே வீடுகள் கட்டி வருவதால், அவர்கள் தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்கி வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் கட்டுமானப் பணிகள் முடிவடைவதால், பயனாளிகள் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

"கடந்த ஆண்டு அதிகாரிகளின் தலையீட்டால், கட்டுமானப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை தொடர்ந்து, பணிகளில் முடக்கம் ஏற்பட்டது," என்கிறார் தூமனூர் குடியிருப்புவாசி.



அதோடு, தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றியும் பழங்குடியின கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

"எங்களது குடியிருப்புகள் வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளதால், யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. சில இரவுகளில் யானைகள் குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே வந்து செல்கின்றன. தெருவிளக்கு வசதி ஏற்படுத்தித் தரும்பட்சத்தில், மனித - யானை மோதல் சம்பவங்களை தவிர்க்க முடியும்," என்கிறார் மற்றொரு குடியிருப்புவாசி. 



இதுபோன்ற அடிப்படை வசதிகளே இல்லாமல் தவித்து வரும் எங்களுக்கு, தேர்தலில் வாக்களிக்க ஆர்வமில்லை என்கின்றனர் தூமனூர், செம்புக்கரை மற்றும் காட்டுசாலை கிராமவாசிகள். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...