கோவை : மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

நடைபெற உள்ள மக்களை தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமீறல்களை தடுக்கவும், முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50,000-க்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்யவும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நான்கு தேர்தல் பறக்கும் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையத்தின் நுழைவு சாலைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை பிரிவின் மண்டல அதிகாரியான ரவிச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட போலீசார், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த சாலை வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தௌபீக் அலி என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, பணத்தை கைப்பற்றி மேட்டுப்பாளையம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையில் அந்த பணத்தை தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்க எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், தேர்தல் விதிகளை மீறி உரிய ஆதாரம் கொடுக்கப்படாத காரணத்தால், அதனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.