கோவை : மேட்டுப்பாளையத்தில் பேக்கரியில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கைப்பையுடன், ரூ. 20,000 ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாயிதா. இவர் புதிய ஆடைகளை மொத்தமாக எடுத்து வந்து, அதனை சில்லறை முறையில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு இவர் வியாபாரத்தை முடித்துக்கொண்டு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு பேக்கரியில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, தனது கைப்பையில் வியாபாரம் செய்த ரூ. 20,000 பணத்துடன் எடுத்துச் சென்றுள்ளார். அந்த பேக்கரியில் தேநீர் அருந்திவிட்டு, தனது கைப் பையினை அங்கேயே வைத்துவிட்டு, அருகில் இருந்த ஓட்டலுக்கு உணவு பார்சல் வாங்க சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், ஒரு தனது மகனுடன் தேநீர் அருந்த வருவது போல் வந்து, அங்கு இருந்த அந்த கைப்பையினை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அங்கு வந்து பார்த்த சாயிஷா தனது ரூ. 20,000 பணம் மற்றும் கைப்பை திருடப்பட்டது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், மேட்டுப்பாளையம் காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேக்கரியில் உள்ள கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்த போது, அதில் நீல நிற சட்டை அணிந்து வந்த நபர் கைப்பையினை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பதிவினை ஆதாரமாக வைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.