நீலகிரியில் அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் : 4 நாட்களில் 2 பேர் மட்டுமே வேட்பு மனு

நீலகிரி : நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

நீலகிரி : நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 



நீலகிரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடவுள்ளன. இந்த நிலையில், வேட்புமனு தேதி அறிவிக்கப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில், இன்று மட்டுமே காலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணிமேகலையும், மதியம் அ.தி.மு.க.வை சேர்ந்த தியாகராஜனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே (மார்ச் 26) எஞ்சியுள்ள நிலையில், இன்னும் எத்தனை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதனிடையே, மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...