சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு கிடைக்காததால் தனித்துப் போட்டியிடுவதாக சமீபத்தில் கூறிய எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ. தீபா தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அ.தி.மு.க. உடன் இணைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது அ.தி.மு.க.வைச் சார்ந்த இயக்கம்தான். பேரவையை அ.தி.மு.க.வுடன் இணைப்பது பற்றி கடந்த 3 மாதங்களாகவே மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டனாகவும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்.
தேர்தலுக்குப் பிறகு பேரவையை அ.தி.மு.க.வுடன் இணைப்பது பற்றி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன், எனத் தெரிவித்துள்ளார்.